மாங்கல்ய சரடு மற்றும் தலைமுடி கூந்தலின் மகத்துவம்: இன்றைய காலக்கட்டத்தில் பேஷனாக எண்ணிக் கொண்டு பலரும் தங்கச்சங்கிலியில் மாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர். "மாங்கல்யச் சரடைத்தான்" சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர். பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச்சங்கிலியில் ஒரு போதும் கோர்த்தல் கூடாது. சரடினால் மாங்கல்யம் போடுபவர்களுக்கு மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் உடனே அவரை பாதிக்காது. கர்ம வினைகள் குறையத் தொடங்கும். குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. உடனே போகும் உயிரை கூட அந்த தாலி சரடின் மகத்துவம் காக்கும். தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது தம்ம