Skip to main content

Posts

Showing posts from July, 2017

நாசமாக்கிய நாகரீகம்

நாசமாக்கிய நாகரீகம் !!!!!! மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை நல்லதையும் கெட்டதையும் கட்டிகாத்த வேட்டிகளும் சேலைகளும் இல்லை ஆறுதலான அன்பை பகிர்ந்துகொள்ள ஆத்தாவும் ஐயாவும் இல்லை பிள்ளைகளை இடுப்பில் சுமந்த அம்மாக்களும் இல்லை தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் இல்லை வெள்ளை எடுத்த உவர் மண்ணும் இல்லை மங்கலங்கள் தந்த மஞ்சள் பையும் இல்லை நெஞ்சம் குளிர பசியாற்றிய கஞ்சி கலையங்களும் இல்லை மாராப்பு சேலை அணிந்த பாட்டிமார்களும் இல்லை இனம் மதம் தாண்டி மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிய உறவுகளும் இல்லை ஒரு உப்பு சவுக்கா

மரங்களின் மகத்துவம்

மரமும் மனிதமும்: மகிழ மரம்: இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும். கொன்றை மரம்: இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது. குறுந்த மரம்: இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வெள்ளை மன்தாரை: குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும். சம்தானக மரம்: நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள். பும்சிக மரம்: சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த வி

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!! 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. 5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 8

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்:

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்: வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !! இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்… முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும். காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எ

இல்லத்தரசிகள் அனுதினமும் வழிபடவேண்டிய பஞ்ச கன்னிகைகள்!

இல்லத்தரசிகள் அனுதினமும் வழிபடவேண்டிய பஞ்ச கன்னிகைகள்! ஐம்பூதங்களின் மயக்கமே உலகம்' என்கிறார் தொல்காப்பியர். நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது உலகம். அதேபோல் பெண்கள் தங்கள் இல்லறவாழ்வில் நினவில் வைத்துக் கொள்ளவேண்டியவர்கள் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மற்றும் மண்டோதரி என்னும் இந்தப் 'பஞ்ச கன்னிகைகள்'. இவர்கள் ஐவரும் தர்மபத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் போற்றப்படுகின்றனர். இவர்களில் திரெளபதி மட்டும் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்தவர். அவரைத் தவிர மற்ற நால்வரும் ராமாயணக் காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களின் தனிச்சிறப்புகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். அகலிகை: அகலிகை என்ற பெயருக்கு 'களங்கமற்றவள்' என்று பொருள். அகலிகை அழகில் சிறந்தவளாகப் போற்றப்படுகிறார். படைப்புக் கடவுளான பிரம்மனின் மானசீக மகளாவார். கௌதம முனிவரின் 'ரிஷிபத்தினி'. 'உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே தன் மகள்' என்று பிரம்மதேவன் கூறினார். அதன்படி ஒரு பசுவைச் சுற்றி வந்து கௌதமர் அகலிகையை மணந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அகலிகையின்