Skip to main content

Posts

Showing posts from May, 2018

சுண்ணாம்புச் செக்கு!

மரச்செக்கு தெரியும்... சுண்ணாம்புச் செக்கு பற்றி தெரியுமா? தமிழ்நாட்டில் கருங்கல் சுவர்களுக்கு முன்னரே செங்கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் கட்டப்பட்ட கருங்கல் கட்டடங்கள் செம்மண் கட்டடங்களின் முன் மாதிரிகள்தான். ஆனால், இரண்டு கட்டடங்களுக்கும் உறுதித் தன்மையைக் கொடுத்து காத்து வந்தது சுண்ணாம்புச் சாந்து. இன்று கட்டப்படக் கூடிய செங்கல் கட்டடங்களைவிட தமிழ்நாட்டில் ஏராளமான சுண்ணாம்புக் காரை கட்டடங்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. அதற்குக் காரணம், செங்கல் கட்டடங்களின் மீது பூசப்பட்ட சுண்ணாம்புக் காரைதான். புதிய வரவான சீமைக் காரை என்று சொல்லக் கூடிய சிமென்ட் காரையால், சுண்ணாம்புக் காரை ஏனோ வழக்கொழிந்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுண்ணாம்புக் காரைகளும், அதனை உற்பத்தி செய்யும் சுண்ணாம்புச் செக்குகளும் புழக்கத்தில் இருந்தன. அவற்றின் வலிமை இன்றைய காலகட்டத்தில் கட்டப்படும் கட்டடங்களின் வலிமையை விடப் பலமடங்கு அதிகம். இதற்கு இன்றளவும் நிற்கும் கட்டடங்களே சாட்சி. சுண்ணாம்புச் செக்கு : சுண்ணாம்பு, மணல், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு காரை செக்கில் அரைத்து சுண

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத வள்ளுவப் பெருந்தகை எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!           உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?            அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.         தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லையாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கேட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.              இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து  உண்ணவே அவை இரண்டும் என்றாராம்