மரச்செக்கு தெரியும்... சுண்ணாம்புச் செக்கு பற்றி தெரியுமா?
தமிழ்நாட்டில் கருங்கல் சுவர்களுக்கு முன்னரே செங்கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் கட்டப்பட்ட கருங்கல் கட்டடங்கள் செம்மண் கட்டடங்களின் முன் மாதிரிகள்தான். ஆனால், இரண்டு கட்டடங்களுக்கும் உறுதித் தன்மையைக் கொடுத்து காத்து வந்தது சுண்ணாம்புச் சாந்து. இன்று கட்டப்படக் கூடிய செங்கல் கட்டடங்களைவிட தமிழ்நாட்டில் ஏராளமான சுண்ணாம்புக் காரை கட்டடங்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. அதற்குக் காரணம், செங்கல் கட்டடங்களின் மீது பூசப்பட்ட சுண்ணாம்புக் காரைதான். புதிய வரவான சீமைக் காரை என்று சொல்லக் கூடிய சிமென்ட் காரையால், சுண்ணாம்புக் காரை ஏனோ வழக்கொழிந்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுண்ணாம்புக் காரைகளும், அதனை உற்பத்தி செய்யும் சுண்ணாம்புச் செக்குகளும் புழக்கத்தில் இருந்தன. அவற்றின் வலிமை இன்றைய காலகட்டத்தில் கட்டப்படும் கட்டடங்களின் வலிமையை விடப் பலமடங்கு அதிகம். இதற்கு இன்றளவும் நிற்கும் கட்டடங்களே சாட்சி.
சுண்ணாம்புச் செக்கு :
சுண்ணாம்பு, மணல், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு காரை செக்கில் அரைத்து சுண்ணாம்புக் காரை தயாரிக்கப்படும். முழுமையாக அரைக்கப்பட்ட சுண்ணாம்புக் காரைக் கலவையானது சில நாள்கள் புளிக்க வைத்தப் பின்னர்தான் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும். இதன் பின்னர் இருக்கும் அறிவியல் நம் முன்னோர்கள் கூடவே முடிந்து விட்டது. பழங்காலத்தில் வீடுகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், கோட்டைகள், அணைக்கட்டுகள், சிறிய நீர்த்தேக்கங்கள், பாலங்கள் முதலியன அனைத்து சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்டது. செங்கல் சுவரினால் கட்டடங்கள் கட்டப்பட்டால் செங்கற்களுக்கு இடையேயும், சுவரின் மேற்புறமும் சுண்ணாம்புக் காரை பூசப்படும். கருங்கல் கட்டடமாக இருந்தால் இரண்டு கருங்கற்களுக்கு இடையே மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுண்ணாம்புக் காரை அரைத்துப் பயன்படுத்தி பல ஆண்டுகள் கடந்து இன்றும் அசைக்க முடியாத, உறுதி தன்மை மாறாத கட்டடங்கள் ஏராளம் உண்டு.
சுண்ணாம்புக் காரை அதன் தேவைகளுக்கேற்ப அரைத் தீர்வை, முக்கால் தீர்வை, முழுத் தீர்வை என மூன்று வகையாகப் பிரிக்கப்படும். இவ்வாறு பிரிக்கப்படும் தீர்வைகள் காரை ஆலைகள் சுற்றும் எண்ணிக்கையைப் பொறுத்தும் அமையும். முழுத் தீர்வையில் மணலானது முழுமையாக அரைக்கப்பட்டிருக்கும். இது பசைத் தன்மையையும், பிடிப்புத் தன்மையையும் அதிகமாகக் கொண்டது. இதனுடன் கடுக்காய் நீர், பதநீர் ஆகியவை சேர்த்துக்கொண்டால் பிடிப்பு இன்னும் அதிகமாகும். இப்போது தயாரான காரைக் கலவையை பூசும்போது அதிலிருக்கும் சுண்ணாம்பு காலப்போக்கில் கரிய அமில வாயுவை உட்கொண்டு கெட்டித் தன்மையை அடைகிறது. இந்த உண்மையை அறிவியல் உலகம் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தது. ஆனால், இந்த உண்மையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
காரை செக்கு என்பது என்ன? சுற்றிலும் வட்ட வடிவமாக வாய்க்கால் போன்று கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். அதில் மணல், சுண்ணாம்பு, வெல்லம், (தேவைப்பட்டால் நாட்டுக் கோழி முட்டை) எனச் சரிவிகிதத்தில் கலந்து போடப்படும். பின்னர் கருங்கல்லால் ஆன சக்கரம் சுழல்வதற்கு வாய்க்கால் பகுதியில் தயாராக இருக்கும். மாடுகள் அதன் வெளிப் பகுதியில் இருக்கும் கம்பியில் சுற்ற ஆரம்பிக்கும். மாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள கல் சக்கரமும் சேர்ந்து சுழல ஆரம்பிக்கும். கல் சக்கரத்தில் அரைபட்டு சுண்ணாம்புக் காரைக் கலவை மெல்லிதாக ஆரம்பிக்கும். அதன் பின்னர் அக்கலவையை ஆட்கள் சேகரித்து பதப்படுத்தி ஊற வைக்கப்படும். அதன் பின்னர் பயன்படுத்தப்படும். சில ஊர்களில் இன்று காட்சிப் பொருளாக மட்டும் களை இழந்து காட்சியளிக்கிறது, காரைச் செக்கு. இதில் பெரும் சோகம் என்னவெனில் நமது மூத்தத் தலைமுறை ஆட்களுக்குக்கூட இன்று இத்தொழில்நுட்பம் மறந்து போய்விட்டதுதான்.
இன்றும் கோயில்களில் பயன்படுத்தப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் இந்தவகை சுண்ணாம்பு சாந்துகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். சுண்ணாம்புச் சாந்தை உருவாக்க இன்று நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றி வருகின்றனர். சீமைக்காரை என்று சொல்லக்கூடிய சிமென்ட் காரை இன்று அதிகமாக வந்தாலும், இன்றளவும் சுண்ணாம்பு சாந்துகள் கோயில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது மட்டுமே ஆறுதலளிக்கக் கூடிய விஷயம்.

Comments
Post a Comment