எண்ணெய்க் குளியல்: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும். ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும். தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும். தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,நல்ல குரல் வளம் உண்டாகும்.சுவையின்மை நீங்கும். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை: நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும். எண்ணெய்தேய்க்கும்பொழுது,எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும்,ஒவ்வொரு