ஆகாச கருடன் கிழங்கு


ஆகாச கருடன் கிழங்கு:




கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.

அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.


பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள்  ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில்கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும்.

உண்மையில் ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு சாகாது . இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது.முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

கைகுழந்தைகள் உள்ள வீட்டில் அக்குழந்தை மேல் பக்கத்து வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களின் பார்வை தினமும் விழும்.மேலும் நண்பர்கள், உறவினர்களின் பார்வையும் விழும் இது எதார்த்தம். அந்த எதார்த்த பார்வை குழந்தையின் உடல்நலனை பாதிக்கும்.அதை எவ்வாறு தடுப்பது என எல்லாம் பெற்றோர்களுக்கும் எழும், அதை தடுக்கும் முறை: ஆகாச கருடன் கிழங்கை கயிறில் கட்டி வீட்டின் வாசற்படிக்கு வெளியில் தலையில் படாதவாறு கட்டிவிட வேண்டும். கிழங்கு அழுகினால் வீட்டில் உள்ளவர்களின் மேல் கண் திர்ஷ்டி அதிகமாக உள்ளது என அர்த்தம், கிழங்கு நன்கு துளிர்விட்டு வளர்ந்தால் கண் திர்ஷ்டி நீங்கி வீடு நன்கு சுபிட்சமடையும்.

Comments

  1. இந்த கிழங்கு ஆகாச கருடன் கிழங்கு தேவைக்கு அழைக்க WHATSAPP 9994050807

    ReplyDelete
  2. இந்த கிழங்கு ஆகாச கருடன் கிழங்கு தேவைக்கு அழைக்க WHATSAPP 9994050807

    ReplyDelete
  3. ஆகாச கருடன் கிழங்கு தேவைக்கு அழைக்க
    9994050807

    7373732760

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

நோய் அணுகா நெறி

மருதோன்றி இலை – மருதாணி இலை