Skip to main content

எண்ணெய்க் குளியல்


எண்ணெய்க் குளியல்:





எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும்.

ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும்.
தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும்.
தலைவலி, பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,நல்ல குரல் வளம் உண்டாகும்.சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:

நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும். எண்ணெய்தேய்க்கும்பொழுது,எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும்,ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும்,பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு,பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும்,கண்களில் விடுவதினால் காதின் நோய்களும்,உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும்,தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.

எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அதிகாலையிலேயே(6.30 மணிக்குள்)குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது,ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,பெண்கள்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:

பகலில் தூங்கக் கூடாது.
அதிக வெயிலில் அலையக்கூடாது.குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
உடலுறவு கொள்ளக் கூடாது.
நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்...

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை – மருதாணி இலை: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி கரங்கள், கால்கள் அழுகு படுத்தப்பட்டன. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்...

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல...