Posts

கானா வாழையின் மகத்துவங்கள்

Image
  கானா வாழையின் மகத்துவங்கள் தாம்பத்யம் சிறக்க உதவும் ‘கன்றுக்குட்டிப் புல்’ என்ற கானா வாழை! கானா வாழை... Commelina benghalensis என்பது இதன் தாவரவியல் பெயராகும். இதற்கு, கானான் வாழை, கானான் கோழிக் கீரை, காணாம் வாழை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த கானா வாழை சைனா, தைவான், ஜமைக்கா, அமெரிக்கா, கலிபோர்னியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது. நீண்ட நெடிய பயணம் செய்திருக்கும் இந்த மூலிகை தமிழ்நாட்டில் தானாகச் செழித்து வளரும் ஒரு தாவரமாகும். குறிப்பாக ஈரம் நிறைந்த நிலங்களிலும் கடற்கரையை அடுத்துள்ள நிலங்களிலும் பூங்காக்களிலும் வளரக்கூடியது. களைச் செடியாக பார்க்கப்படும் இதன் இலைகள் முட்டை போன்ற வடிவத்தில் காணப்படும்,  பூக்கள் நீல நிறத்தில் இருக்கும். கானா வாழையை ஓர் அற்புத மூலிகை என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பயன்பாடு அறிந்தவர்களைவிட அதை பயன்படுத்திப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும். இதிலுள்ள வேதிப்பொருள்கள் நோய் உண்டாக்கும் கிருமிகளை ஒழித்துப் புண்களை ஆற்றும் சக்தி படைத்த...

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

Image
  நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால் பலரும் மூடநம்பிக்கையாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லா விஷயங்களிலும் மூட நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கையை மூலதனமாக கொண்டவர்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை எனவே காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொல்ல ஏன் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர்? காலை மடக்கி சாப்பிட உட்காருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்போது பெரும்பாலான மக்கள் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு உட்கார்ந்து சாப்பிடுவது இல்லை! இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேரில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றை பலரும் கடைபிடித்து வருகின்றனர். வெறும் தரையில் அல்லது பாயில் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடுவதால் நம் உடம்பில் இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் குறையும். இடு...

சாமுத்திரிகா லட்சணம் என்றால் என்ன?

Image
ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லட்சணம் என்று பெயர். இது ஒரு பழமையான கலையாகும். சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் சாமுத்திரிகா லட்சணத்தின் படி ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி உடலின் எல்லா பாகங்களும் அமைவதில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள்.  சாமுத்திரிகா லட்சணத்தின் படி எந்தெந்த பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய  வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்  அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை ...

நெடுஞ்சாலைகளில் அரளி செடிகளை வளர்ப்பது ஏன்?

Image
நெடுஞ்சாலைகளில் ஏன் அரளி செடிகள் வளர்க்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம். நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் அரளி செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை, நீங்கள் வாகனத்தில் பயணிக்கும்போது கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக செவ்வரளி செடிகள்தான் மிகவும் அதிகமாக இருக்கும். இது அரளி குடும்பத்தை சேர்ந்த செடிகளில் ஒன்றாகும். அரளி செடிகளை பொறுத்தவரையில், செவ்வரளி மற்றும் வெள்ளரளி உள்ளிட்ட வகைகள் இருக்கின்றன. இதில் செவ்வரளி செடிதான், நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் மிக அதிகளவில் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அரளி செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். அப்படி இருக்கும்போது, நெடுஞ்சாலைகளில் ஏன் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். செவ்வரளி செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்றாலும், அவற்றின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது என்பதால்தான், நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் அவற்றை வளர்க்கின்றனர். நெடுஞ்சாலைகளின் வழியாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன....

காப்புக் கட்டு என்பது வெறும் சடங்கல்ல... ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு!

காப்புக் கட்டு என்பது வெறும் சடங்கல்ல... ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு! இதோ இன்று போகி. இந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை. தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் தை மகளை வரவேற்பது தமிழர் மரபு. இதோ இன்று போகி. இந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்கு என விரல் சொடுக்கில் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம...

காது குத்துவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மைகள்:

Image
காது குத்துவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மைகள்: குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கு காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. நம் உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள நாம் சில விடையங்களை செய்தாக வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு. குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கிறது. இடது மற்றும் வலது முலையை ஒன்றிணைக்கும் மையப்பகுதியாக காது விளங்குவதால் காது குத்தவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது. காது குத்தி தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது. காது குத்தும் சமயத்தில் கவனிக்க வே...

எள்ளின் மருத்துவப் பயன்கள்!

Image
எள்ளின் மருத்துவப் பயன்கள்! “இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெயும், 16 விழுக்காடு மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் ச...