Skip to main content

Posts

Showing posts from February, 2018

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல

மண்டோதரியின் அறிவுரை:

மண்டோதரியின் அறிவுரை: மண்டோதரி, இராமாயண இதிகாசத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். இவள் இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி, இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் ‘மென்மையான இடையுடையவள்’ எனப் பொருள்படும். இராமாயணத்தின் குறிப்புகளின் படி, மண்டோதரி மிகவும் அழகானவள்; தூய பக்தியுடையவள்; நேர்மையானவள். இவள் பஞ்ச-கன்யர்களின் ஒருவளாக குறிப்பிடப்படுகிறாள். சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடு பட்டிருக்கிறாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன், தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான். மண்டோதரியின் பிறப்பு இராமாயணத்தின் உத்தர காண்டத்தின் படி, மண்டோதரி மாயாசுரனின் வளர்ப்பு மகள். மாயாசுரன், கஷ்யப்ப முனிவரின் மகன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்களும் இருந்தனர். மண்டோதரியின் திருமணம் இராமாயணக் காலத்தில், உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிக்கக் காத்திருந்தால் மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்ததால், உத்தரகோசமங்கை தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டு, ராவணனை கரம் ப

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்:

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்: எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள். எத்தனை லட்சம் கொடுத

நோய்களை மிரட்டும் பேய் மிரட்டி!

நோய்களை மிரட்டும் பேய் மிரட்டி: பேய் மிரட்டி இலையை பச்சையாக எடுத்து திரி போல் செய்து ஐந்து வகை எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் பில்லி ,சூனியம் ,ஏவல்,மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமண தடை விலகும் எதிர் அடுக்குகளில் அமைந்த வெளிரிய வெகுட்டல் வாடை மணமுடைய நீண்ட இலைகளையும், வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி இனம் பேய் மிரட்டி. இது எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. புதராக இருக்கும் இடங்களில் அரிதாகக் காணப்படும். இதைப் பார்ப்பதற்கு பெரும் தும்பை மாதிரியே இருக்கும். காய், பூவை வைத்து அடையாளம் காணவேண்டும். செடி முழுவதும் மருத்துவக் குணமுடையது. பசியை அதிகமாக்கி, குடல் வாயுவை அகற்றவும், வியர்வையைப் பெருக்கவும், காய்ச்சலை விரட்டவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணமும் உடையது. தமிழகம் எங்கும் காணப்படுகின்றது. வேறு பெயர்கள்: எருமுட்டை பீநாறி, பிரமட்டை, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி, வகைகள்: ஒற்றைப் பேய் மிரட்டி, இதை வெதுப்படக்கி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் சற்று வட்டமான வடிவில் இருக்கும். எல்லாமே ஏறக்குறைய ஒரே மருத்துவக் குணம் உடையதாக இரு