Skip to main content

நோய்களை மிரட்டும் பேய் மிரட்டி!

நோய்களை மிரட்டும் பேய் மிரட்டி:



பேய் மிரட்டி இலையை பச்சையாக எடுத்து திரி போல் செய்து ஐந்து வகை எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் பில்லி ,சூனியம் ,ஏவல்,மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமண தடை விலகும்

எதிர் அடுக்குகளில் அமைந்த வெளிரிய வெகுட்டல் வாடை மணமுடைய நீண்ட இலைகளையும், வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி இனம் பேய் மிரட்டி.

இது எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. புதராக இருக்கும் இடங்களில் அரிதாகக் காணப்படும். இதைப் பார்ப்பதற்கு பெரும் தும்பை மாதிரியே இருக்கும். காய், பூவை வைத்து அடையாளம் காணவேண்டும். செடி முழுவதும் மருத்துவக் குணமுடையது. பசியை அதிகமாக்கி, குடல் வாயுவை அகற்றவும், வியர்வையைப் பெருக்கவும், காய்ச்சலை விரட்டவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணமும் உடையது. தமிழகம் எங்கும் காணப்படுகின்றது.

வேறு பெயர்கள்: எருமுட்டை பீநாறி, பிரமட்டை, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி,

வகைகள்: ஒற்றைப் பேய் மிரட்டி, இதை வெதுப்படக்கி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் சற்று வட்டமான வடிவில் இருக்கும். எல்லாமே ஏறக்குறைய ஒரே மருத்துவக் குணம் உடையதாக இருக்கின்றன.

ஆங்கிலத்தில்: Anisomeles malabarica, Lamiaceae

மருத்துவக் குணங்கள்:

பேய் மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க விடாத வாதக் காய்ச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.

பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.

பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல், வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.

பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம் போம்.

பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போம் என்க.

உபயோகிக்கும் முறை : இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம்போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மட்குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளைகொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேதுபிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.

இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.
இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.

இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச்சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.

ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.

10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டுவறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்துகொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச்சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி.யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பைய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும் பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.

பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.
பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை, அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சந்தேகம்
உள்ளோர் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

பயன் படும் பாகங்கள் – செடி முழுதும். (சமூலம்)

Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்...

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை – மருதாணி இலை: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி கரங்கள், கால்கள் அழுகு படுத்தப்பட்டன. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்...

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல...