Skip to main content

மண்டோதரியின் அறிவுரை:

மண்டோதரியின் அறிவுரை:





மண்டோதரி, இராமாயண இதிகாசத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். இவள் இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி, இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் ‘மென்மையான இடையுடையவள்’ எனப் பொருள்படும்.

இராமாயணத்தின் குறிப்புகளின் படி, மண்டோதரி மிகவும் அழகானவள்; தூய பக்தியுடையவள்; நேர்மையானவள். இவள் பஞ்ச-கன்யர்களின் ஒருவளாக குறிப்பிடப்படுகிறாள். சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடு பட்டிருக்கிறாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன், தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

மண்டோதரியின் பிறப்பு

இராமாயணத்தின் உத்தர காண்டத்தின் படி, மண்டோதரி மாயாசுரனின் வளர்ப்பு மகள். மாயாசுரன், கஷ்யப்ப முனிவரின் மகன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.

மண்டோதரியின் திருமணம்

இராமாயணக் காலத்தில், உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிக்கக் காத்திருந்தால் மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்ததால், உத்தரகோசமங்கை தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டு, ராவணனை கரம் பிடித்தாள் என்றும், அவர்களின் திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்றும், மங்களேஸ்வரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப்படுகிறது.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம், மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் பிராஃமின் மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இடத்தில் இராவணனுக்கென ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மண்டோதரியின் காதல்

மண்டோதரி இராவணனின் மீது மிகுந்த காதல் கொண்டவள். அவள் தன் கணவனின் வீரத்தையும் வலிமையும் கண்டு பெருமை கொண்டாள். தன் கணவன் மற்றப் பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதைப் பற்றியும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். தர்ம பத்தினியாக திகழ்ந்த மண்டோதரி, தன் கணவனுக்கு தர்மத்தை எடுத்துக் கூறி, மனைவியை தவிர மற்ற பெண்ணை தீண்டக் கூடாது எனவும் அறிவுரை செய்தாள். எனினும் இராவணன் அவளின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல், அவளை நிராகரித்தான்.

சீதையைக் காத்த மண்டோதரி

சீதையை அபகரித்து வந்த இராவணன, தன் இச்சைக்கு இணங்க அவளை துன்புறுத்தினான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை துன்புறுத்தினான். எனினும் சீதை ஒருபோதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து, இராவணனைத் தடுத்தாள்.

‘ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல, உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும், உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும்’ என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விடுத்தான்.

மண்டோதரி சீதையின் தாயா?

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம், தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

மண்டோதரியின் அறிவுரை

இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும், அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தாலும், ஒருபோதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதிவரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

”ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல், எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும், அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். தன்மீது அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்.” – இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.

Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்

கடுக்காயின் மகத்துவங்கள்!!

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.   என்றும் இளமையோடு வாழ சித்தர்பெருமானார் திருமூலர் கூறும் எளிய வழி! கடுக்காய் பற்றிய சில சித்தர் கூற்றுக்கள்: 'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை. "கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்." "ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்." "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை" "கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்." இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும். கடுக்காய் பல வகைகள் உண்டு. அவை : கருங்கடுக்காய் செங்கடுக்காய் வரி கடுக்காய் பால் கடுக்காய் இவை அனைத்தும் வெவேறு வகைகளில், நமக்கு பயன் தருவன. நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும், நம் மன ரீதியான பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ? மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏற்பட்டால், மன உளைச்சல் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். அத

விளக்குகளும் விளக்கங்களும்!

விளக்குகளும் விளக்கங்களும்! உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள். இறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார். இங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை பொய்கையாழ்வார். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார