Skip to main content

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்:

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்:




எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.

எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா?  ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா?

🌿வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம்.


🌿வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார்.

🌿இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம்.

🌿கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன.

🌿ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில்  பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”

திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கொங்கணவர்  மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.
இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?

ஆம். எல்லாம் சாத்தியமே.

அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.

வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.

கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.

கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள்.
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.

Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்...

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை – மருதாணி இலை: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி கரங்கள், கால்கள் அழுகு படுத்தப்பட்டன. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்...

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல...