Posts

Showing posts from 2023

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

Image
  நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால் பலரும் மூடநம்பிக்கையாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லா விஷயங்களிலும் மூட நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கையை மூலதனமாக கொண்டவர்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை எனவே காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொல்ல ஏன் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர்? காலை மடக்கி சாப்பிட உட்காருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்போது பெரும்பாலான மக்கள் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு உட்கார்ந்து சாப்பிடுவது இல்லை! இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேரில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றை பலரும் கடைபிடித்து வருகின்றனர். வெறும் தரையில் அல்லது பாயில் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடுவதால் நம் உடம்பில் இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் குறையும். இடு...

சாமுத்திரிகா லட்சணம் என்றால் என்ன?

Image
ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லட்சணம் என்று பெயர். இது ஒரு பழமையான கலையாகும். சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் சாமுத்திரிகா லட்சணத்தின் படி ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி உடலின் எல்லா பாகங்களும் அமைவதில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள்.  சாமுத்திரிகா லட்சணத்தின் படி எந்தெந்த பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய  வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்  அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை ...

நெடுஞ்சாலைகளில் அரளி செடிகளை வளர்ப்பது ஏன்?

Image
நெடுஞ்சாலைகளில் ஏன் அரளி செடிகள் வளர்க்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம். நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் அரளி செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை, நீங்கள் வாகனத்தில் பயணிக்கும்போது கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக செவ்வரளி செடிகள்தான் மிகவும் அதிகமாக இருக்கும். இது அரளி குடும்பத்தை சேர்ந்த செடிகளில் ஒன்றாகும். அரளி செடிகளை பொறுத்தவரையில், செவ்வரளி மற்றும் வெள்ளரளி உள்ளிட்ட வகைகள் இருக்கின்றன. இதில் செவ்வரளி செடிதான், நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் மிக அதிகளவில் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அரளி செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். அப்படி இருக்கும்போது, நெடுஞ்சாலைகளில் ஏன் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். செவ்வரளி செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்றாலும், அவற்றின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது என்பதால்தான், நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் அவற்றை வளர்க்கின்றனர். நெடுஞ்சாலைகளின் வழியாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன....