நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால் பலரும் மூடநம்பிக்கையாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லா விஷயங்களிலும் மூட நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கையை மூலதனமாக கொண்டவர்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை எனவே காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொல்ல ஏன் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர்? காலை மடக்கி சாப்பிட உட்காருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்போது பெரும்பாலான மக்கள் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு உட்கார்ந்து சாப்பிடுவது இல்லை! இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேரில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றை பலரும் கடைபிடித்து வருகின்றனர். வெறும் தரையில் அல்லது பாயில் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடுவதால் நம் உடம்பில் இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் குறையும். இடுப்பு