Skip to main content

Posts

Showing posts from 2017

கொய்யாப்பழத்தின் நன்மைகள்

கொய்யாப்பழத்தின் நன்மைகள்: பழங்ககளிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. * வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. * கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். * கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். * கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள்

சிறுதானிய ஸ்நாக்ஸ்

சிறுதானிய ஸ்நாக்ஸ்: இன்றைய குழந்தைகள் சாப்பாட்டைவிட ஸ்நாக்ஸைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லை என்று தெரிந்தும், பல பெற்றோரும் காற்று நிரப்பப்பட்ட பாக்கெட் ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலேயே குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில், ஸ்நாக்ஸ் செய்யலாம் என்றால், எப்படிச் செய்வது என்று தெரிவது இல்லை. சிறுதானியத்தை உணவாக மட்டும் இன்றி, ஸ்நாக்ஸாகவும் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் ஆசையும் பூர்த்தி ஆகும். தேவையான ஊட்டச்சத்தும் சேரும். கேழ்வரகு முறுக்கு தேவையானவை: கேழ்வரகு மாவு  அரை கிலோ, அரிசி மாவு  50 கிராம், சீரகம்  சிறிதளவு, உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும், கேழ்வரகு மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் கலந்து, தண்ணீர் சேர்த்து, நல்ல பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகப் பிழிய வேண்டும். பிறகு, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அருமையான கேழ்வர

மாதுளைப்பூவின் நன்மைகள்

மாதுளைப்பூவின் நன்மைகள்: எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள். உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும். ... உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்ட

நிலக்கடலையின் மகத்துவங்கள்

நிலக்கடலை: நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் ந

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம்

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்கும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும். அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..?? பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான். ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை கு

116 வகையான இயற்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

116 வகையான இயற்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்: 1. பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2.தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3.வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4.காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும். 5.தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். 6.காயத்துக்கு காட்டாமணக்கு காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும். 7.உப்பலுக்கு உப்பிலாங்கொடி மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும். 8.குழந்தையை காப்பான் கரிப்பான் கரிசாலைச் சாறு 2 த

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை: கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் கு

உணவை மருந்தாக்கிய பாரம்பரிய அரிசிகள்!

உணவை மருந்தாக்கிய பாரம்பரிய அரிசிகள்!

ஆமணக்கின் மகத்துவங்கள்:

ஆமணக்கு ( கொட்டமுத்து ) கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும். 1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும். 2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும். 3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும். 4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும். 5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசி

முடக்கறுத்தானின் மகத்துவங்கள்:

முடக்கறுத்தானின் மகத்துவங்கள்: முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான் “சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி” – சித்தர் பாடல் கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம். முடக்கத்தான் கீரை சூப் : தேவையானவை 1.முடக்கத்தான் கீரை 2.தேவையான உப்பு 3.தேவையான மிளகுத்தூள் முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம். இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரை

முசுமுசுக்கையின் மகத்துவங்கள்:

முசுமுசுக்கையின் மகத்துவங்கள்: முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. அமைதியின்மை

தொட்டாற்சிணுங்கியின் மகத்துவங்கள்:

தொட்டாற்சிணுங்கியின் மகத்துவங்கள்: தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல… உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு. தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள். புண்கள் குறைய: தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும். வயிற்று கடுப்பு குறைய: தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும். இடுப்புவலி குறைய: தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குறையும். சர்க்கரை நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும்

கோயில்களில் புறாக்கள் ஏன் ?

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ???? 1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும். 4. கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்டிகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும். 5. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும். 6. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாலிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது. நமது முன்னோர்கள் விஞ்ஞானிகள்... முட்டாள்கள் அல்ல !!!

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் : 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும். 5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும். 6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது. 7. குடும்பத்தில் அமைதி நிலவ வே

அந்த கால பழக்கங்களும் அறிவியல் உண்மைகளும்

அந்த கால பழக்கங்களும் அறிவியல் உண்மைகளும்: கோலம் : அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. பொட்டு: நெற்றியில் பொட்டு வைப்பது பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. மேலும், ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து பேசும்போது, பேசுபவர்களின் கவனமானது  நெற்றியில் வைத்திருக்கும் பொட்டின் மீதுதான் குவியும். இதனால் தவறானப் பார்வையிலிருந்தும் பொட்டுத் தடுக்கின்றது. தோடு : மூளையின்  செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும். நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. ப்ரேசிலட், வாட்ச், காப்பு  அணிவதும் பாலுறுப்பின் புள்ளிக

கடுக்காயின் மகத்துவங்கள்!!

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.   என்றும் இளமையோடு வாழ சித்தர்பெருமானார் திருமூலர் கூறும் எளிய வழி! கடுக்காய் பற்றிய சில சித்தர் கூற்றுக்கள்: 'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை. "கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்." "ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்." "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை" "கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்." இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும். கடுக்காய் பல வகைகள் உண்டு. அவை : கருங்கடுக்காய் செங்கடுக்காய் வரி கடுக்காய் பால் கடுக்காய் இவை அனைத்தும் வெவேறு வகைகளில், நமக்கு பயன் தருவன. நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும், நம் மன ரீதியான பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ? மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏற்பட்டால், மன உளைச்சல் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். அத

எண்ணெய்க் குளியல்

எண்ணெய்க் குளியல்: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும். ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும். தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும். தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,நல்ல குரல் வளம் உண்டாகும்.சுவையின்மை நீங்கும். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை: நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும். எண்ணெய்தேய்க்கும்பொழுது,எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும்,ஒவ்வொரு

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்குத்தி அணிவது ஏன்? மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப்

பெண்கள் மூக்குத்தி இடதுபக்கம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால்.. மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு