கடுக்காயின் மகத்துவங்கள்!!


கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
 

என்றும் இளமையோடு வாழ சித்தர்பெருமானார் திருமூலர் கூறும் எளிய வழி! கடுக்காய் பற்றிய சில சித்தர் கூற்றுக்கள்:

'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.

"கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்."

"ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்."

"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை"

"கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்."

இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும்.

கடுக்காய் பல வகைகள் உண்டு. அவை :

கருங்கடுக்காய்

செங்கடுக்காய்

வரி கடுக்காய்

பால் கடுக்காய்

இவை அனைத்தும் வெவேறு வகைகளில், நமக்கு பயன் தருவன.

நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும், நம் மன ரீதியான
பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் ஏற்பட்டால், மன உளைச்சல் ஏற்படும்.
அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும்.

அதனால் கோபம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்.

மலச்சிக்கலால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்னை தாம்பதிய குறைபாடு.

இந்த தாம்பத்திய குறைபாடு, விந்தணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது.

இதனால்  தாம்பத்தியத்தை பாதிக்கிறது.

மலச்சிக்கல் இன்றி இருந்தாலே, நம் முடிவுகள் பெரும்பாலும் சரியான முடிவுகளாக இருக்கும்.

தாம்பத்திய குறைபாடு இன்றி இருந்தால் வாழ்வும் நன்முறையில் இருக்கும்.

கடுக்காய் இந்தப் பணியைச் சிறப்பாக செய்கிறது.

மலச்சிக்கல் தீர்க்கவும், விந்தணுக்கள் பெருகவும் என. பல வகைகளில் இதன் பயன்கள் விரிந்து செல்கின்றன.
இந்த உலகின் இயற்கை கொடுத்த அனைத்தும் பயன்பாடு கொண்டதே! ஆனால், எப்போது பயன்படுத்துகிறார்கள், எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம். இதன் அடிப்படை யிலே தான் ஒரு பொருள் விஷம் ஆவதும், மருந்தாவதும் உள்ளது.

இதற்கு கடுக்காயும் விதி விலக்கல்ல!

எனவே இதை பயன்படுத்தும் விதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுக்குக்கு தோலில் விஷம்

கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்று  கூறுவது உண்டு.

எனவே இதன் கொட்டைகளை நீக்கி விட்டு தோல்  பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காய் பொடி சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் பொடி தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.

விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’   (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது.

''மருத்துவக் குணங்கள் ஏராளமாக இருப்பதால், 'வைத்தியரின் காதலி’ (பிஷக் ப்ரியா) என்று கொண்டாடப்படுகிறது''.

கடுக்காய்க் கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம். கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.

கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.

கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.

கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.

பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.

கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும். கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும்.

கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.

கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்.


"கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்


கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய்


ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்


ஊட்டி உடல் தேற்றும் உவந்து."


என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப் புகழ்கிறது.

சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து பாலில் கலந்து புகட்டலாம். காது நோய்களுக்கும் கண்கண்டமருந்தாகத் திகழ்கிறது.  கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக் குறிப்பிடுவார்கள்....

புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுக்காயை உபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும். அது விஷத்தன்மை உடையது. இதுவே சுத்தி செய்தல். இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை.








Comments

Popular posts from this blog

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

மருதோன்றி இலை – மருதாணி இலை

நோய் அணுகா நெறி