அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?

நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.

பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.

பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது.

மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.

பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.

Comments

Popular posts from this blog

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

நோய் அணுகா நெறி

மருதோன்றி இலை – மருதாணி இலை